ஆதியிலே கர்த்தருடைய வசனம் (வார்த்தை) சகலத்தையையும் சிருஷ்டித்தது. அந்த வார்த்தை நோவா, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு ஆகியோருடன் உறவாடியது. வாக்குதத்தங்களை வாக்குபண்ணியது. மோசே, யோசுவா ஆகியோரை வாக்குதத்தங்களை நோக்கி நடத்தியது. சாமுவேல், தாவிது ஆகியோரை ஆளுகை செய்து ஆள வைத்தது. ஏசாயா, எசேக்கியேல் ஆகியோருக்கு வெளிப்பட்டது. ஆனால், அந்த வார்த்தை மாம்சமாகி, நமக்குள்ளே வாசம்பண்ணுகிறார் (யோவான் 1:14).
ஏனெனில், அவர்கள் நம்மை அல்லாமல் பூரணராகாதபடி விசேஷித்த நன்மையானதொன்றைத் (வார்த்தை மாம்சமாகி) தேவன் நமக்காக முன்னதாக நயமித்திருந்தார் (ஏபிரேயர் 11:40). ஆதலால், நாம் அவருக்குள் இருக்கிறோம், பிழைக்கிறோம், அசைகிறோம். அவராலன்றி, நம்மால் ஒன்றும் செய்ய கூடாது. பழைய ஏற்பாட்டில் தேவன் தமது ஆளுகையை மனிதர்கள் மத்தியில் வெளிப்படுத்தினார், ஆனால் புதிய ஏற்பாட்டில், அவர் நமக்குள்ளே ஆளுகை செய்கிறார். அந்த வார்த்தை ( வசனம்) நறுமணமாய் நம்மில் இருந்து மற்றவருக்கும் வீச வேண்டும். அல்லேலுயா! ஆமென்.