அறிவிப்புக்கள் #2

நமது Youtube  தளம் ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன் (Android application) வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.   இதனை டவுன்லோடு (download) செய்ய கீழ்காணும் லிங்கை கிளிக் (click) செய்யவும்.  தேவனுக்கே மகிமையுண்டாவதாக.

http://www.appsgeyser.com/getwidget/jesussoldierindia%20YOUTUBE%20channel/

குறிப்பு:  நமது Youtube தளத்திற்க்கான நேரடி முகவரி (direct link)  http://www.youtube.com/user/jesussoldierindia?feature=CAQQwRs%3D

வியப்பூட்டும் வேதாகம உண்மைகள் #1

வேதாகமத்தில் அதிக தடவைகள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மனிதர்கள்.

ஆதாரம்: http://anudhinamanna.net

1. தாவீது என்ற பெயர் 1118 தடவைகள்

2. மோசே என்ற பெயர் 740 தடவைகள்

3. ஆரோன் என்ற பெயர் 339 தடவைகள்

4. சவுல் என்ற பெயர் 338 தடவைகள்

5. ஆபிரகாம் என்ற பெயர் 306 தடவைகள்

6. சாலொமோன் என்ற பெயர் 295 தடவைகள்

7. யாக்கோபு என்ற பெயர் 270 தடவைகள்

8. யோசேப்பு என்ற பெயர் 208 தடவைகள்

9. யோசுவா என்ற பெயர் 197 தடவைகள்

10. பவுல் என்ற பெயர் 185 தடவைகள்

11. பேதுரு என்ற பெயர் 166 தடவைகள்

12. யோபு என்ற பெயர் 137 தடவைகள்

13. எரேமியா என்ற பெயர் 136 தடவைகள்

14. சாமுவேல் என்ற பெயர் 135 தடவைகள்

15. ஈசாக்கு என்ற பெயர் 127 தடவைகள்

நம்முடைய கர்த்தராகிய இயேசு என்னும் நாமமோ 973 தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

குறிப்பு: இது மூல ஆதாரத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

அறிவிப்புக்கள் #1

நமது இணையதளம் ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன் (Android application) வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.   இதனை டவுன்லோடு (download) செய்ய கீழ்காணும் லிங்கை கிளிக் (click) செய்யவும்.  தேவனுக்கே மகிமையுண்டாவதாக.

http://www.appsgeyser.com/getwidget/jesussoldierindia,A%20tamil%20christian%20website/

குறிப்பு: இதனை பயன்படுத்த தங்கள் கைப்பேசியில் ( mobile phone) தமிழ் எழுத்துக்கள் (fonts) செயல்பட வேண்டும்.

கர்த்தருடைய வழிகள்

இந்த தியானத்தை pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
குறிப்பு: தியானத்தின் பக்க அளவு அதிகமானதாலும், download செய்துக் கொள்ள வசதியாகவும் pdf வடிவில் தரப்பட்டுள்ளது.

கர்த்தருடைய கரம்

கர்த்தருடைய கரம் இஸ்ரவேல் மக்களை எகிப்தில் இருந்து கானானுக்கு நடத்தி சென்றது. கர்த்தருடைய கரத்தினால் நடத்தபடுவது என்பது தேவனுடைய முழு ஆளுகைக்குள் நாம் இருப்பதை குறிக்கிறது. ஆம், கர்த்தருடைய கரத்தினால் நடத்தப்படும் பொழுது நமது சுயசித்தத்திற்கு அங்கு இடமில்லை. நம்முடைய வழிகளுக்கும், எண்ணங்களுக்கும் மேலாக தேவனுடைய வழிகளும், எண்ணங்களும் (சித்தங்களும்) நம்முடைய வாழ்வில் நிறைவேறும். இஸ்ரவேல் மக்களை ஆண்டவர் நடத்தி சென்ற  பாதையை அவர்களால் விளங்கி கொள்ள முடியவில்லை.  சிவந்த சமுத்திரம் போன்ற தடைகளும், மாரா போன்ற கசப்புகளும், அவர்கள் பாதையில் வந்தபொழுது அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லைஆனால் தேவனே அவர்களை அவ்வழியில் கரம்பிடித்து நடத்தி சென்றார். மேலும் எதிரிகள் அவர்களை எதிர்த்த போதும், அவர்கள் விரும்பின இறைச்சி கிடைக்காத போதும், அவர்கள் செல்கின்ற பாதை தேவனால் வழிநடத்தப்படுகின்ற பாதை என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லைஎகிப்தில் தொடங்கி அவர்கள் வழிபிராயணத்தில் எத்தனையோ அற்புதங்களை தேவன் மோசே மூலமாக செய்தபொழுதும், அவர்கள் தேவனுக்கும், மோசேக்கும் கீழ்படியவில்லைஅதைக் காட்டிலும் தாங்கள் விட்டு வந்த எகிப்திற்கே திரும்ப வேண்டும் என்பது அவர்கள் எண்ணமாயிருந்தது.

நம்முடைய வாழ்க்கை பயணத்திலும், கர்த்தருடைய கரம் நம்மோடிருக்கிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோம்பாவத்தில் இருந்து நம்மை மீட்டெடுத்து நித்திய ஜீவவாழ்வை நோக்கி தேவன் நம்மை நடத்திக் கொண்டருக்கிறார் என்பதையும் நாம் அறிவோம்தேவன் வனாந்திரத்தில் இஸ்ரவேல் மக்களை போஷித்து, பாதுகாத்து வந்தது போல நம்மையும் இவ்வுலக வாழ்வில் போஷித்து, பாதுகாத்து வருகிறார்ஆண்டவர் இஸ்ரவேல் மக்களை போஷித்து காபாற்றினது வனாந்திரத்தில் வாழ்வதற்காக அல்ல, வாக்குத்தத்த தேசமாகிய கானானை சென்று அடைவதற்காகதான்நம்மையும் தேவன் இவ்வுலகில் சகல நன்மைகளையும் கொடுத்து காப்பாற்றுவது பரம கானானாகிய பரலோகத்திற்கு வழிநடத்தி செல்வதற்கேஇப்படிப்பட்ட ஓர் உன்னதமான வாழ்க்கை பயணத்தில் நம்மைதேவன் வழிநடத்தி வருகிற வேளையில் நமக்கும் சிவந்த சமுத்திரம் போன்ற தடைகளும், மாரா போன்ற கசப்பான அனுபவங்களும் ஏற்படுகிறது.

ஆனால் நாம் கர்த்தருடைய கரத்தை உறுதியாய் பிடித்துக்கொள்வோமானால், தேவன் நிச்சயமாக இப்படிப்பட்ட ஒவ்வொரு சூழ்நிலையிலும் நம்மை வழுவாது கரம்பிடித்து நடத்திசெல்வார்ஏனெனில்நான் உன்னை விட்டுவிலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை (எபி 13:5) என்று அவர் சொல்லியிருக்கிறாரேமேலும் இஸ்ரவேல் மக்களை போல நாமும் சில காரியங்களை இச்சித்து பாதை விலகி போகும் பொழுதும், நம்மை கரம்பிடித்துவழி இதுவே இதிலே நடவுங்கள் (ஏசா 30:21) என்று வழி நடத்துகிறவரும் அவரே. பிரதான மேய்ப்பராகிய அவர் பின்னே அவர் சத்தத்துக்கு செவிக்கொடுத்து செல்வோமானால் நாம் உள்ளும் புறம்பும் சென்று மேய்ச்சலைக் கண்டடைவோம் (யோ 10:3,9). அவர் கரத்தில் உள்ள கோலும், தடியும் நம்மை தேற்றும் (சங் 23:4).

அவரே நம்மை நீதியின் பாதையில் நடத்துகிறவர் (சங் 23:3).  “நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்த பாதையில் மரணம் இல்லை” (நீதி 12:28).  உன்னதப்பாட்டு 5:4 கூறுகிறதுஎன் நேசர் தமது கையைக் கதவுத் துவாரத்தின் வழியாய் நீட்டினார், அப்பொழுது என் உள்ளம் அவர் நிமித்தம் பொங்கினது“.  ஒரு வேளை நீங்கள் கர்த்தருடைய அன்பை அறிந்திருந்தும் அவரை விட்டு விலகி (வழி விலகி) இருப்பீர்கள் என்றால், அவருடைய கரம் உங்களை நோக்கி நீட்டப்படுகிறது, அவர் உங்களை விட்டு போகும்முன்னே அவர் கரத்தை பற்றிக்கொள்ளுங்கள். வெளிப்படுத்தல் 3:20 கூறுவது போலஇதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்என்று உங்கள் இதய கதவை தட்டிக்கொண்டிருப்பதும் தேவனுடைய கரமே. இப்பொழுதே அவர் கரத்தை பற்றி பிடித்துக்கொள்ளுங்கள், அவரே நம்மை நித்திய ஜீவகரையில் சேர்ப்பவர். ஆமென்