உன்னை தேடும் ஒருவர்: இது ஒரு தமிழ் கிறிஸ்தவ மிண்ணனு சுவிஷேச கைப்பிரதி (Tamil Christian E-Gospel Tract). ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் எங்கம் அறிவிக்கபட வேண்டும் என்றே இது உருவாக்கப்பட்டுள்ளது. இதை காணும் நீங்கள் யாராய் இருந்தாலூம், ஆண்டவராகிய இயேசுவை உங்கள் இருதயத்தில் எற்றுக்கொள்ளுங்கள். அவரே உங்களை இரட்சிப்பவர், ஆசிர்வதிப்பவர். ஆமென்.
Monthly Archives: ஆகஸ்ட் 2012
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
பின்வரும் வீடியோவை காணவும்
தேவ பிரசன்னம்
இவ்வுலகத்தில் மனிதர்கள் எத்தனையோ காரியங்களையும், பொருள்களையும், மனிதர்களையும் நோக்கி ஓடுகிறார்கள். பிற மனிதர்களுடைய அன்பிற்காகவும், ஐக்கியத்திற்காகவும், மேலும் பல பொருள்களை அடைவதற்காகவும் பிரயாசபடுகின்றனர். ஏனெனில், அவைகள் தங்கள் வாழ்க்கையில் தங்களோடு இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். இவையாவும் நல்லதே. ஆனால், ஒரு மனித வாழ்க்கை பயணத்திற்கு இன்றியமையாதது தேவ பிரசன்னமேயாகும்.
இவ்வுலகில் நாம் விரும்புவது எதுவும் நம்மிடத்தில் இருந்தாலும், இல்லாவிட்டலும் தேவ பிரசன்னம் நமக்கு அவசியம் தேவை. ஏனெனில், தேவ பிரசன்னமே நாம் வாழும் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தை கொடுக்கிறது. தேவ பிரசன்னமே, தேவ சத்தத்தை அனுதினமும் கேட்பதற்க்கும், தேவ உறவை ஒவ்வொரு நொடிபொழுதும் உணர்வதற்க்கும் நமக்கு வழிசெய்கிறது.
ஆதாம், ஏவாளோடு தேவ பிரசன்னம் பரிபூரணமாய், பிரத்தியட்சமாய் இருந்தது. ஆனால், அவர்களோ அதை இழந்து போனார்கள். அப்போஸ்தலர்கள் தேவ பிரசன்னத்தால் நிரம்பி இருந்தனர். ஏனெனில், கிறிஸ்து அவர்களோடு வாழ்ந்தார், அனுதினமும் அவர்களோடு பேசினார், உண்டார், உறங்கினார், பல காரியங்களை அவர்களுக்கு கற்றுக்கொடுத்தார். பூமியில், அதுவும் மாம்ச சரீரத்தில் இருக்கும்பொழுது, தேவனோடு இவ்வளவு ஐக்கியமாய் இருப்பது அவர்களுக்கு கிடைத்த பாக்கியம்.
ஆனால் கிறிஸ்து பரமேற வேண்டிய வேளை வந்தபொழுதோ, பரிசுத்த ஆவியானவரின் முலமாய் தமது பிரசன்னத்தை அவர்களுக்கு வெளிபடுத்தினார். பெந்தெகொஸ்தே நாளில் சிஷர்கள் ஆவியை பெற்றபொழுது, அவர்கள் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசு தங்களோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையை வல்லமையாய் வெளிபடுத்தினர். “வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை; என்ணிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்” (அப் 3:6) என்று அப்.பேதுருவால் தைரியமாய் கூற முடிந்தது.
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர, சகோதிரிகளே கிறிஸ்துவின் பிரசன்னத்தை ஒவ்வொரு நொடிபொழுதும் நம் வாழ்வில் காண வாஞ்சிப்போமாக. ஆண்டவரின் பிரசன்னத்தோடு நம் வாழ்க்கையில் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கும்பொழுது, நம் வாழ்வில் நாம் ஒருபோதும் இடறி விழமாட்டோம். பிற மனிதர்களின் ஐக்கியத்தை காட்டிலும், வாழ்வில் நாம் பெற்றிருக்கும் அல்லது பெற வாஞ்சிக்கும் எந்த பொருட்கள் தரும் சந்தோஷத்தை காட்டிலும், தேவ பிரசன்னம் நமக்கு அளவில்லாத சமாதானத்தையும், சந்தோஷத்தையும் எப்பொழுதும் தரும்.
கிறிஸ்துவின் வருகையில் நாம் வாஞ்சிப்பதும் இந்த தேவ பிரசன்னத்தையே. ஆம், கிறிஸ்து வரப்போவது நம்மை அவரோடு எப்பொழுதும் வைத்துக்கொள்ளவே. அதிலும், மரணத்தை காணாமல் மகிமை அடைந்த சரீரத்தோடு, அவரண்டை சேர்வது மேலான பாக்கியம். அப்படிபட்ட மேலான பாக்கியத்தை பெற, நாம் அப்.பவுலை போல எப்பொழுதும் தேவ பிரசன்னத்தால் நிரம்பி இருக்க வேண்டும். அப்.பவுல் கைது செய்யப்பட்டு பலவித துன்பத்திற்குள்ளாக சென்ற வேளையிலும் அவரோடு இருந்த தேவ பிரசன்னம் சொல்லிமுடியாது. பின்வரும் வசனத்தை தியானித்து பாருங்கள்.
“மிகுந்த கலகம் உண்டானபோது, பவுல் அவர்களால் பீறுண்டுபோவானென்று சேனாபதி பயந்து, போர்ச்சேவகர் போய், அவனை அவர்கள் நடுவிலிருந்து இழுத்துக் கோட்டைக்குக் கொண்டுபோகும்படி கட்டளையிட்டான். அன்று இராத்திரியிலே கர்த்தர் பவுலின் அருகே நின்று : பவுலே, திடன் கொள்; நீ என்னைக் குறித்து எருசலேமிலே சாட்சிகொடுத்தது போல ரோமாவிலும் சாட்சிகொடுக்க வேண்டும் என்றார்” (அப் 23: 10,11).
பவுல் ஒருபக்கம் மரணபோராட்டத்தில் இருந்தார், கிறிஸ்துவை போல பவுலையும் கொலை செய்து விடவேண்டும் என யூதர்கள் எண்ணினர் (அப் 23: 12). அப்படிபட்ட சூழ்நிலையின் மத்தியிலும், கர்த்தராகிய இயேசு, அண்ட சராசரங்களையும் தமது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கிறவர், சகல ஜீவராசிகளுக்கும் ஜீவனை கொடுத்து வாழ வைத்து கொண்டிருப்பவர், அந்த ஒரு மனிதனின் (பவுல்) அருகே வந்து நின்று அவனோடு பேசுவதே, தேவ பிரசன்னத்தின் மகிமையும் மகத்துவமாகும். ஆம், பவுலுக்கு ஆண்டவர் ஏதோ உறக்கத்தில் தரிசனம் தரவில்லை, தமது வார்த்தையை மட்டும் அனுப்பவில்லை. அதிலும் மேலாக, பவுல் அருகே வந்து நின்று ஒரு தாயைப் போல அவரை தேற்றுகிறார், திடப்படுத்துகிறார்.
இப்படிபட்ட அனுபவமே நமக்கும் தேவை. தேவனோடு அவருடைய வருகையில் எடுத்துக்கொள்ளப்பட்டு, அவரோடு நித்திய காலமும் இருப்பது போலவே, இவ்வுலகில் வாழ்கின்ற இந்த நாட்களிலேயே, பவுலை போல நாமும் தேவ பிரசன்னத்தை அனுபவிப்போமானால், அதுவே இவ்வுலகில் நாம் பெறும் மேலான பாக்கியமாகும். கர்த்தர்தாமே அப்படிப்பட்ட கிருபையை நம் ஒவ்வொருவருக்கும் அருள்வாராக. அல்லேலுயா, ஆமென்.
இழப்புகளின் மத்தியில்
இழப்புகள் என்பது நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாகும். அதிலும், யோபுவை போல ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு காரியத்திலும் இழப்புக்கள் ஏற்படும் பொழுதும், அடி மேல் அடி விழும் பொழுதும் நாம் நிலைகொலைந்து போகிறோம். யோபுவும், அப்படியே நிலைகொலைந்தே சாம்பலில் உட்கார்ந்தார் (யோபு 2 :8). அவருடைய பல கேள்விகள் எனக்கு ஏன் இந்த துன்பம் என்று கேட்பதாகவே இருந்தது. நாமும் அப்படியே பல வேளைகளில் தேவனிடத்தில் கேட்கிறோம்.
ஆனால், யோபுவுக்கு எப்படி அதற்கு பதில் வரவில்லையோ, நமக்கும் தேவன் அநேக நேரங்களில் ஏன் என்ற நமது கேள்விக்கு பதில் அளிப்பதில்லை. ஏனெனில், திரை மறைவில் தேவனுக்கும், சாத்தானுக்கும் இடையே நடந்ததை யோபு ஒருபோதும் அறியவில்லை. தேவனும் அதை அவருக்கு அறிவிக்கவில்லை.
ஆனால், வேளை வந்தபொழுது தேவன் தமது வல்லமையை யோபுவின் வாழ்க்கையில் வெளிப்படுத்தினார். சாத்தான் யோபுவின் வாழ்க்கையில் எல்லாவற்றையும் ஒரே நாளில் எடுத்துக்கொண்டான். ஆனால் தேவன் அவை ஒவ்வொன்றையும் அவருக்கு இரட்டதனையாய் திருப்பித்தந்தார். ஏனெனில், யோபுவுக்கு ஒரு நிச்சயம் இருந்தது, அது “அவர் என்னை கொன்றுபோட்டாலும், அவர் மேல் நம்பிக்கையாய் இருப்பேன்” (யோபு 13 :15) என்பதே. ஆம், அவர் வாழ்க்கையீல் இழக்க அவர் உயீரை தவிர வேறெதுவும் இல்லை, அவர், மனைவிகூட “தேவனைத் தூஷித்து ஜிவனை விடும்” (யோபு 2 :9) என்று கூறிவிட்டாள். ஆனால், அந்த சூழ்நிலையில் மத்தியிலும் அவர் தமது நம்பிக்கையை விடவில்லை. ஏனெனில், “என் மிட்பர் உயிரோடிருக்கிறார்” (யோபு 19 :25) என்பதை அவர் அறிந்திருந்தார். அதுமாத்திரமல்ல, நித்திய வாழ்வைக்குறித்தும் அவருக்கு நம்பிக்கை இருந்தது (யோபு 19 :26,27).
அதனால்தான், தான் இவ்வுலகத்தில் எல்லாவற்றையும் இழந்த பின்பும், தான் நத்திய வாழ்வை இழந்து போகமாட்டேன் என்ற நம்பிக்கை அவருக்குள் இருந்தது. எனவே, தேவன் இவ்வுலகத்திற்குரியவைகளையல்ல, மேலானவைகளையே தேடின யோபுவிற்கு, ஆவிக்குரிய ஆசிர்வாதங்களையும், பூமிக்குரிய நன்மைகளையும் அளவில்லாமல் அளித்தார். இறுதியில் யோபு ஒன்றையும் இழந்து போகவில்லை, தோற்றுபோனவன் பிசாசே. எனவே, நாமும் தேவனை மேலானவைகளுக்காக தேடுவோம். அப்பொழுது நமக்கு சகலமும், சம்பூரணமாய் கூடக் கொடுக்கப்படும்.நாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாய் மட்டுமல்ல, பிறருக்கு ஆசிர்வாதமாயும் இருப்போம்.
இவற்றை நான் வேத வசன போதனையாக மட்டுமல்ல, வாழ்வில் அனுபவிக்கிறவனாகவே எழுதுகிறேன். எனவே, கிறிஸ்துவுக்குள்ளான சகோதர, சகோதிரிகளே நீங்களும் இப்படியே கர்த்தருக்குள் நிலைதிருப்பீர்களாக. கிறிஸ்துவை அறியாதவர்களாய், இப்படிபட்ட நம்பிக்கை இல்லாமல் வாழ்வில் தவித்துகொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்துவை அறிவிப்போம். அவர்களையும் துன்ப இருளில் இருந்து விடுதலை செய்வோம். மாரநாதா! அல்லேலுயா, ஆமென்.
கர்த்தருடைய வசனம்
ஆதியிலே கர்த்தருடைய வசனம் (வார்த்தை) சகலத்தையையும் சிருஷ்டித்தது. அந்த வார்த்தை நோவா, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு ஆகியோருடன் உறவாடியது. வாக்குதத்தங்களை வாக்குபண்ணியது. மோசே, யோசுவா ஆகியோரை வாக்குதத்தங்களை நோக்கி நடத்தியது. சாமுவேல், தாவிது ஆகியோரை ஆளுகை செய்து ஆள வைத்தது. ஏசாயா, எசேக்கியேல் ஆகியோருக்கு வெளிப்பட்டது. ஆனால், அந்த வார்த்தை மாம்சமாகி, நமக்குள்ளே வாசம்பண்ணுகிறார் (யோவான் 1:14).
ஏனெனில், அவர்கள் நம்மை அல்லாமல் பூரணராகாதபடி விசேஷித்த நன்மையானதொன்றைத் (வார்த்தை மாம்சமாகி) தேவன் நமக்காக முன்னதாக நயமித்திருந்தார் (ஏபிரேயர் 11:40). ஆதலால், நாம் அவருக்குள் இருக்கிறோம், பிழைக்கிறோம், அசைகிறோம். அவராலன்றி, நம்மால் ஒன்றும் செய்ய கூடாது. பழைய ஏற்பாட்டில் தேவன் தமது ஆளுகையை மனிதர்கள் மத்தியில் வெளிப்படுத்தினார், ஆனால் புதிய ஏற்பாட்டில், அவர் நமக்குள்ளே ஆளுகை செய்கிறார். அந்த வார்த்தை ( வசனம்) நறுமணமாய் நம்மில் இருந்து மற்றவருக்கும் வீச வேண்டும். அல்லேலுயா! ஆமென்.
இயேசு கிறிஸ்து – திருச்சபை திருமண அழைப்பிதழ்
வணக்கம்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். கர்த்தருடைய நாமம் எங்கும் மகிமை படும்படியாக, அவருடைய இரட்சிப்பின் சுவிசேஷத்தை யாவரும் அறிந்து கொள்ளும்படியாக இந்த தமிழ் கிறிஸ்தவ வலைதளம் ஏற்படுத்தபட்டுள்ளது.

