வாழ்க்கை படகு

கடல் என்னும் இவ்வுலகில், வாழ்க்கை என்னும் என் படகில் அநேகரோடு பயணித்து கொண்டிருந்தேன். திடீரென்று பலத்த புயல் விசீயது, இருள் சூழ்ந்தது, எந்த திசையிலும் எந்த கரையும் தென்படவில்லை. ஐயோ! ஆண்டவரே புயல் விசூகிறதே (நாச மோசங்கள்) என்றேன், ஆண்டவர் அமைதியாய் இருந்தார். எல்லாம் இருளாய் (பயங்கரங்கள்) இருக்கிறதே என்றேன், ஆண்டவர் அமைதியாய் இருந்தார். எந்த கரையும் (வழியும்) தென்படவில்லையே என்றேன், ஆண்டவர் அமைதியாய் இருந்தார். எனக்கு அருமையானவர்களை காப்பாற்றும் என்றேன், ஆண்டவர் அமைதியாய் இருந்தார். மற்ற மனிதர்கள் கடலில் (உலகத்தில்) குதித்து ஓடிவிட்டனரே என்றேன், ஆண்டவர் அமைதியாய் அது அவர்கள் வழி என்றார்.

என்னை வேறு படகில் மாற்றுமே என்றேன், ஆண்டவர் அமைதியாய் இதுதான் உன் படகு (வாழ்க்கை) என்றார். என் படகு (வாழ்க்கை) மூழ்கபோகிறது, நான் மடிய போகிறேன் என்றேன். ஆண்டவர், நானும் உன்னோடு உன் படகில் இருப்பதை ஏன் மறந்தாய் என்றார். நானோ என்னால் இதை எதிர்கொள்ள (தாங்க) முடியவில்லை என்றேன். ஆண்டவர், நான் தான் படகை ஓட்டுகிறேன், பயப்படாதே என்றார். எனக்கு அருமையானவர்கள் படும் வேதனைகளை கண்டேன். அவர்களை அணைத்து கொண்டு, ஆண்டவரண்டையில் (அவர் பாதத்தில்) உட்கார்ந்தேன். சிறிது நேரத்தில் ஒளி வந்தது, இருள் மறைந்தது, தென்றல் விசீயது, புயல் அடங்கினது. ஆண்டவர் என் படகை நித்திய ஜீவ கரையில் சேர்த்தார்.

எனக்கு அருமையானவர்களை முதலாவது கரையில் இறக்கினேன். மிகவும் சோர்ந்து போனேன். ஆண்டவர் தம் கரத்தை நீட்டினார். அவர் கரத்தை பற்றி கொண்டு கரையில் இறங்கினேன். தூரத்தில் கடலில் குதித்தவர்கள் மாண்டு போயிருப்பதை கண்டேன். ஆண்டவரே ஏன் இதெல்லாம் நடந்தது என்றேன், ஆண்டவர் அமைதியாய் என்னை பின்பற்றி வா என்றார். இந்த போராட்டத்தில் (வாழ்க்கை படகில்) இருந்து என்னை காப்பாற்ற ஆண்டவர் பட்ட காயங்களை அப்பொழுதுதான் கண்டேன். கண்ணீரோடு அவர் பின் எனக்கு அருமையானவர்களோடு சென்றேன். பரலோக தேசத்தில் என் மோட்ச வீட்டை நோக்கி.

1. PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. ஆடியோ வடிவில்:

மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும்

மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும் என்னும் இத்தியானம், படிப்பதற்கு வசதியாக கீழ்கண்ட பல்வேறு வடிவங்களில்  வெளியிடப்பட்டுள்ளது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே இங்கே கிளிக் செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க http://snack.to/fv1mq9nh (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றோரு வடிவம் பின்வருமாறு:

3. ஆடியோ வடிவில்:

இழப்புகளின் மத்தியில்

இழப்புகள் என்பது நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாகும். அதிலும், யோபுவை போல ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு காரியத்திலும் இழப்புக்கள் ஏற்படும் பொழுதும், அடி மேல் அடி விழும் பொழுதும் நாம் நிலைகொலைந்து போகிறோம்.  யோபுவும், அப்படியே நிலைகொலைந்தே சாம்பலில் உட்கார்ந்தார் (யோபு 2 :8). அவருடைய பல கேள்விகள் எனக்கு ஏன் இந்த துன்பம் என்று கேட்பதாகவே இருந்தது.  நாமும் அப்படியே பல வேளைகளில் தேவனிடத்தில் கேட்கிறோம்.

ஆனால்,  யோபுவுக்கு எப்படி அதற்கு பதில் வரவில்லையோ, நமக்கும் தேவன் அநேக நேரங்களில் ஏன் என்ற நமது கேள்விக்கு பதில் அளிப்பதில்லை.  ஏனெனில், திரை மறைவில் தேவனுக்கும், சாத்தானுக்கும் இடையே நடந்ததை  யோபு ஒருபோதும் அறியவில்லை.  தேவனும் அதை அவருக்கு அறிவிக்கவில்லை.

ஆனால், வேளை வந்தபொழுது தேவன் தமது வல்லமையை யோபுவின் வாழ்க்கையில் வெளிப்படுத்தினார்.  சாத்தான் யோபுவின் வாழ்க்கையில் எல்லாவற்றையும் ஒரே நாளில் எடுத்துக்கொண்டான்.  ஆனால் தேவன் அவை ஒவ்வொன்றையும் அவருக்கு இரட்டதனையாய் திருப்பித்தந்தார்.  ஏனெனில்,  யோபுவுக்கு ஒரு நிச்சயம் இருந்தது, அது “அவர் என்னை கொன்றுபோட்டாலும், அவர் மேல் நம்பிக்கையாய் இருப்பேன்” (யோபு 13 :15) என்பதே.  ஆம், அவர் வாழ்க்கையீல் இழக்க அவர் உயீரை தவிர வேறெதுவும் இல்லை, அவர், மனைவிகூட “தேவனைத் தூஷித்து ஜிவனை விடும்” (யோபு 2 :9) என்று கூறிவிட்டாள்.  ஆனால், அந்த சூழ்நிலையில் மத்தியிலும் அவர் தமது நம்பிக்கையை விடவில்லை. ஏனெனில், “என் மிட்பர் உயிரோடிருக்கிறார்” (யோபு 19 :25) என்பதை அவர் அறிந்திருந்தார்.  அதுமாத்திரமல்ல, நித்திய வாழ்வைக்குறித்தும் அவருக்கு  நம்பிக்கை இருந்தது (யோபு 19 :26,27).

அதனால்தான், தான் இவ்வுலகத்தில் எல்லாவற்றையும் இழந்த பின்பும், தான் நத்திய வாழ்வை இழந்து போகமாட்டேன் என்ற நம்பிக்கை அவருக்குள் இருந்தது.  எனவே, தேவன் இவ்வுலகத்திற்குரியவைகளையல்ல, மேலானவைகளையே தேடின யோபுவிற்கு, ஆவிக்குரிய ஆசிர்வாதங்களையும், பூமிக்குரிய நன்மைகளையும் அளவில்லாமல் அளித்தார்.  இறுதியில் யோபு ஒன்றையும் இழந்து போகவில்லை, தோற்றுபோனவன் பிசாசே.  எனவே, நாமும் தேவனை மேலானவைகளுக்காக தேடுவோம்.  அப்பொழுது நமக்கு சகலமும், சம்பூரணமாய் கூடக் கொடுக்கப்படும்.நாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாய் மட்டுமல்ல, பிறருக்கு ஆசிர்வாதமாயும் இருப்போம்.

இவற்றை நான் வேத வசன போதனையாக மட்டுமல்ல, வாழ்வில் அனுபவிக்கிறவனாகவே எழுதுகிறேன்.  எனவே, கிறிஸ்துவுக்குள்ளான சகோதர, சகோதிரிகளே நீங்களும் இப்படியே கர்த்தருக்குள் நிலைதிருப்பீர்களாக.  கிறிஸ்துவை அறியாதவர்களாய், இப்படிபட்ட நம்பிக்கை இல்லாமல் வாழ்வில் தவித்துகொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும்  கிறிஸ்துவை அறிவிப்போம்.  அவர்களையும் துன்ப இருளில் இருந்து விடுதலை செய்வோம். மாரநாதா! அல்லேலுயா, ஆமென்.