கடந்து வந்த காலங்கள் கண்ணீரில் சென்றாலும்
நிகழ் கால நிகழ்வுகள் நெருக்குதலாய் இருந்தாலும்
எதிர் கால எதிர்பார்ப்புகள் எப்படி அமைந்தாலும்
கரம் பிடித்து வந்தோர் கடந்து சென்றாலும்,
வாழ்க்கை முடிந்து சென்றாலும்
கரம் பற்றி நிற்போர் காத்து நின்றாலும் (எனக்காய்)
நான் பற்றும் கரம் ஒன்றே
என்னை வனையும் (முக்காலமும்) கரம் அதுவன்றோ!
என்னை (தம்) உள்ளங்கரத்தில் வரைந்துள்ள கரம் அதுவன்றோ!
எக்காலமும் தாங்கும், ஏந்தும், சுமக்கும் கரம் அதுவன்றோ!
அது மட்டும் போதுமே, நான் வாழ்வேன் (நம்பிக்கையோடு)
எக்காலத்திலுமே.
“இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்”. (எபி 13:8)
Like this:
Like Loading...