கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார் (நீதி 10:22).
ஆவிக்குரிய ஆசிர்வாதங்கள் மற்றும் பூமிக்குரிய நன்மைகள் யாவும் அவரால் நமக்கு கிடைக்கும் பலன். ஊழியங்கள், கனிகள், வரங்கள் என்பவற்றை தருபவர் அவரே. பொன்னும், பொருளும் மட்டும் அல்ல, பெற்றோர், கணவன், மனைவி, பிள்ளைகள், சகோதர, சகோதரிகள், நண்பர்கள் என இவ்வுலகில் யாவற்றையும் நமக்கு தருபவர் அவரே. இப்படிப்பட்ட ஆசிர்வாதங்களினால் நமக்கு இவ்வுலகிலும், மறு உலகிலும் நன்மைகள் மற்றும் மகிழ்ச்சி உண்டாகிறது. ஆனால் சிலர் மேற் கூறப்பட்ட நன்மைகளை ஆண்டவரின் மூலம் பெற்றுக்கொள்வதற்கு பதிலாக, தங்கள் சுய புத்தியினால், பெலத்தினால், முயற்சியினால் அல்லது மற்ற மனிதர்களின் தயவினால் அவற்றை பெற முயற்சிக்கின்றனர். சிலர் பூமிக்குரிய பொன், பொருள்களை சம்பாதிக்கின்றனர். தமக்கு பிடித்தவரை மணக்கின்றனர். ஆனால் கர்த்தரால் தரபடாத இவை யாவற்றாலும் அவர்களுக்கு இவ்வுலகிலும், மறு உலகிலும் துன்பமே உண்டாகும், நீதி 28:20 கூறுகிறது “உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்” என்று. எனவே ஆபிரகாமை போல (ஆதி 14:22,23) கர்த்தரால் வரும் நன்மைகளையே நாம் நாடி தேடுவோமாக. அவர் நமக்கு தருபவற்றில் திருப்தியோடிருப்போம். நம் ஒவ்வொருவருடைய ஜெபமும் “என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்” (நீதி 30:9) என்பதாக இருக்கட்டும். ஆமென், அல்லேலூயா.