அனைவருக்கும் கிறிஸ்து உயிர்பின் நல்வாழ்த்துக்கள் 2021

புனித வெள்ளி 2021

இந்த கொடிய கொரோனா காலத்தில்,

நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள். 1 பேதுரு 2:24

என்ற சத்தியத்தின்படி ஆவிக்குரிய சுகத்தையும், சரீர சுகத்தையும் நம் ஒவ்வொருவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாமே அருள்வாராக. ஆமென்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2021

அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான். (1 சாமு 7:12)


இம்மட்டும் (2020 வரை) நமக்கு உதவி செய்த எபெனேசர், இனிமேலும் (2021 ஆண்டிலும்) நம்மை நடத்திடுவார்.  அனைவருக்கும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.  ஆண்டவர் தாமே நம் ஒவ்வொருவரையும் தமது செட்டையின் மறைவிலே, மறைத்து பாதுகாப்பாராக.

.

அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துக்கள் 2020

கொடிய கொரோனா கொன்று குவித்தாலும்

கொரோனாவிலும் கொடியோர் மனமடிவாக்கினாலும்

நடக்கும் (2020) பாதையெல்லாம் காரிருள் சூழ்ந்தாலும்

நாளை (2021) என்னவாகுமோ என்று கண் கலங்கினாலும்

அஞ்சாதே மனமே, பார்!

விடி வெள்ளியே, போ!

இயேசு பாலகன் உன் கதியே.

புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2020

அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான். (1 சாமு 7:12)

இம்மட்டும் (2019 வரை) நமக்கு உதவி செய்த எபெனேசர், இனிமேலும் (2020 ஆண்டிலும்) நம்மை நடத்திடுவார்.  அனைவருக்கும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.  ஆண்டவர் தாமே நம் ஒவ்வொருவரையும் ஆசிர்வதிப்பாராக.

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் 2019

அனைவருக்கும் இனிய கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துக்கள்.  கர்த்தர் தாமே உங்களை ஆசிர்வதிப்பராக.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2019

வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர், உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது.

சங்கீதம் 65:11