யூதேயா தேசத்திலுள்ள பெத்லெகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார். (மத்தேயு 2:6)
அன்று இயேசு பிறந்தார் பெத்லெகேம் ஊரினிலே
இன்று இயேசு பிறந்தார் என் உள்ளந்தனிலே
அன்று இயேசு பிறந்தார் பெத்லெகேம் ஊரினிலே
அறிவித்தனர் தூதர்கள், மேய்ப்பர்கள் அனைவரும்
இன்று இயேசு பிறந்தார் என் உள்ளந்தனிலே
அறிவிப்பது என் கடமையன்றோ!
அன்று இயேசு பிறந்தார் பெத்லெகேம் ஊரினிலே
சாஸ்திரிகள் யாவரும் வந்து பணிந்தனரே
இன்று இயேசு பிறந்தார் என் உள்ளந்தனிலே
என்னை முற்றிலும் அர்பணித்து பணிந்திடுவேனே
அன்று இயேசு பிறந்தார் பெத்லெகேம் ஊரினிலே
நட்சத்திரம் வழிநடத்தி வந்து நின்றதே
இன்று இயேசு பிறந்தார் என் உள்ளந்தனிலே
நானே அந்த நட்சத்திரமாய் மாறி போனேனே!
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் 2024