உன்னதப்பாட்டின் உன்னதங்கள் என்னும் இந்த தியானம், இந்த புத்தகத்தில் உள்ள வசனங்களுடைய இணை வசனங்கள் மூலம் உன்னதப்பாட்டின் உன்னதங்களை விளக்குகிறது.
(1) என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள். அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார் (உன் 2:16)
நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன். (யோ 17:21)
நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். (யோ 17:23)
நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம். இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள். இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன். (எபே 5:30-32)
(2) என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடிவருவோம். (உன் 1:4)
இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும். (யோ 10:16)
அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: எங்கே, ஆண்டவரே, என்றார்கள். அதற்கு அவர்: பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார். (லூக் 17:37)
நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார். (யோ 12:32)
(3) நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன். (உன் 2:1)
கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம். (II கொ 2:14,15)
(4) நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது. (உன் 8:6)
நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன். (யோ 10:15)
(5) நான் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன். (உன் 5:2)
இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். (வெளி 3:20)
குறிப்பு: மேற்க்கண்ட தியானத்தை pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Thanks for this message.Today god gave me answer through this. Glory to god!
மிக்க நன்றி. தேவ அன்பிலும், தேவ கிருபையிலும் தொடர்ந்து நிலைத்திருங்கள். மற்றவர்களுக்கும் இந்த தியானங்களை அறிமுகப்படுத்துங்கள். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமென்.
என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள்.
மிக்க நன்றி. தொடர்ந்து தியானியுங்கள். மற்றவர்களுக்கும் இதை அறிமுகப்படுத்துங்கள். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமென்.