கிருபையை பற்றிக் கொண்டவர்கள் – பாகம் 4 – மனந்திரும்பின கள்ளன்

126 thief-on-the-cross

கிருபையை பற்றிக்கொண்டவர்கள் – பாகம் 4 (மனந்திரும்பின கள்ளன்) என்னும் இத்தியானம் ஆண்டவர் எவ்வாறு தமது கிருபையை, பல்வேறு நேரங்களில், பலவிதங்களில், சில தனிப்பட்ட மக்களின் வாழ்க்கையில் அருளும் பொழுது, அதற்கு அவர்கள் கீழ்ப்படிந்து எவ்வாறு இரட்சிப்பை, மீட்பை, நித்திய ஜீவனை பெற்றார்கள் என்பதை நாம் கடந்த மூன்று பாகங்களில் கண்டோம். இந்த நான்காம் பாகத்திலும், மிகவும் முக்கியமான ஒரு தருணத்திலே, ஆண்டவர் சிலுவையில் தமது ரத்தத்தை, அனைத்து மக்களுக்காகவும் சிந்துகிற வேளையில், அவருடைய கிருபையை உணர்ந்து, அதை பற்றிப் பிடித்துக்கொண்டவன் தான், சிலுவையில் அவரோடு கூட அறையப்பட்ட கள்ளரில் ஒருவன். அவனைப்பற்றி இப்பதிவில் தியானிப்போம். 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

கிருபையை பற்றிக் கொண்டவர்கள் – பாகம் 3 – சமாரிய ஸ்திரீ

கிருபையை பற்றிக்கொண்டவர்கள் – பாகம் 3 (சமாரிய ஸ்திரீ) என்னும் இத்தியானம் இதற்கு முன்பு கிருபையைப் பற்றிக் கொண்டவர்கள் பாகம் இரண்டில், நாம் எவ்வாறு ரோம சிறைச்சாலைக்காரன் பவுலின் மூலமாய் தேவ கிருபையைப் பெற்று இரட்சிக்கப்பட்டான் என்பதை கண்டோம். அதே வேளையில் முதலாம் பாகத்தில் ஆண்டவர் எப்படிப்பட்டவரோ என்று பார்க்க வந்த சகேயுவை, ஆண்டவர் எப்படி இரட்சித்தார் என்பதையும் கண்டோம். இப்பாகம் மூன்றில், சகேயுவை போல் ஆண்டவரை பற்றி எதுவும் கேள்விப்படாமல், அன்றாட வேலையான கிணற்றில் தண்ணீர் எடுக்க வந்த சமாரிய ஸ்திரீயை ஆண்டவர் சந்தித்து, அவளுடன் நேர்முகமாக உரையாடி, ஆண்டவர் அவளுக்கு அருளி இருக்கும் தேவ கிருபையை, ஈவை அவளுக்கு விளங்க காட்டி அவளை ரட்சித்தார். அவள் இரட்சிக்கப்பட்டது மட்டுமல்லாமல், ஊரில் உள்ள மக்கள் அனைவருக்கும் ஆண்டவரை பற்றி கூறி, அவர்களும் ஆண்டவரே, கிறிஸ்துவாகிய உலக ரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கும்படியாய் செய்தாள்.  இதைப்பற்றி இப்பதிவில் தியானிப்போம். 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

இவர் யாரோ

இவர் யாரோ என்னும் இத்தியானம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே மேசியா, உலக இரட்சகர், ஒன்றான மெய் தேவன் என்பதை உலக மக்களுக்கு எவ்வாறு அறிவிக்க வேண்டும் என்பதை யோவான் 4 ஆம் அதிகாரத்தில் ஆண்டவர் சமாரிய ஸ்திரீயோடு இடைப்பட்டு தம்மை யார் என்று அவளுக்கு வெளிப்படுத்தியதை கொண்டு விளக்குகிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்: