அனைவருக்கும் இனிய கிறிஸ்து உயிர்பின் நல்வாழ்த்துக்கள் 2024

புனித வெள்ளி 2024

கெத்செமனே தோட்டத்தில் உம் துயர சத்தம் கேட்டேன்

என் துன்ப சத்தங்கள் அடங்கி போக கண்டேன்

உம்மை ஆற தழுவிய நயவஞ்சகன் செயல் கண்டேன்

என்னை ஆறா துயரில் ஆழ்த்திய நயவஞ்சகர்கள் செயல் மறந்தேன்

உம்மை விட்டு ஓடிப்போனோர் நிலை கண்டேன்

என்னை மறந்தோர் நிலை எண்ணி மறந்தேன்

சிலுவையில் அறைய எழும் கூச்சல் கேட்டேன்

என்னை எதிர்த்த குரல்கள், மன ஒலி கேட்டேன்

நீதிமான் என்று அறிந்தும், கை கழுவிய நிலை கண்டேன்

என்னை கைவிட்டோரின் முன், என் நீதி ஏதுமில்லை என்றறிந்தேன்

பிதாவே இவர்களுக்கு மன்னியும், என்ற அன்பின் மொழி கேட்டேன், சிலுவையினிலே!

என்னையும் மன்னித்த மாதயவை எண்ணி நின்றேன், சிலுவையண்டையிலே!

அனைவருக்கும் அன்பின் புனித வெள்ளி 2024 வாழ்த்துக்கள்.

கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து)

judas

                                                                       

கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து) என்னும் இத்தியானம் தேவன் சில நபர்கள் மீது அதிகமான கிருபையைப் பொழிந்தும், தங்களுக்கு கொடுக்கப்பட்ட மிகுதியான கிருபையை போக்கடித்தவர்கள் பற்றி தியானிக்கிறது. அதிலும் குறிப்பாக இப்பாகம் 4 இல், பன்னீரெண்டு அப்போஸ்தலர்களில் ஒருவராய், ஆண்டவரால் நேரடியாக ஊழியத்திற்கு தெரிந்துக்கொள்ளப்பட்டும், அந்த கிருபையை இழந்த யூதாஸ்காரியோத்து வாழ்வில் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய எச்சரிப்பின் செய்தியை பற்றி தியானிக்கிறது. 

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்