புனித வெள்ளி 2024

கெத்செமனே தோட்டத்தில் உம் துயர சத்தம் கேட்டேன்

என் துன்ப சத்தங்கள் அடங்கி போக கண்டேன்

உம்மை ஆற தழுவிய நயவஞ்சகன் செயல் கண்டேன்

என்னை ஆறா துயரில் ஆழ்த்திய நயவஞ்சகர்கள் செயல் மறந்தேன்

உம்மை விட்டு ஓடிப்போனோர் நிலை கண்டேன்

என்னை மறந்தோர் நிலை எண்ணி மறந்தேன்

சிலுவையில் அறைய எழும் கூச்சல் கேட்டேன்

என்னை எதிர்த்த குரல்கள், மன ஒலி கேட்டேன்

நீதிமான் என்று அறிந்தும், கை கழுவிய நிலை கண்டேன்

என்னை கைவிட்டோரின் முன், என் நீதி ஏதுமில்லை என்றறிந்தேன்

பிதாவே இவர்களுக்கு மன்னியும், என்ற அன்பின் மொழி கேட்டேன், சிலுவையினிலே!

என்னையும் மன்னித்த மாதயவை எண்ணி நின்றேன், சிலுவையண்டையிலே!

அனைவருக்கும் அன்பின் புனித வெள்ளி 2024 வாழ்த்துக்கள்.

பாவ மன்னிப்பின் மேன்மை

bible_video_go_sin_no_more

பாவ மன்னிப்பின் மேன்மை என்னும் இத்தியானம் ஆண்டவர் சிலுவையில் சிந்தின இரத்ததால் நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டது மட்டுமல்ல, பாவத்தினால் உண்டான சாபத்தில் இருந்தும், அதன் பின்விளைவுகளில் இருந்தும் நம் ஆவி, ஆத்துமா மற்றும் சரீரம் முழுவதையும் ஆண்டவர் விடுவிக்கிறார் என்பதை பற்றி தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

3. ஆடியோ வடிவில்

சிலுவை மொழி

உற்றாரும் (யூத மக்கள்) கைவிட

உடன் இருந்தோரும் (சீஷர்கள்) ஓடிட

நம்பி வந்தோனும் (பேதுரு) மறுதலித்திட

நீதி செய்வோனும் (பிலாத்து) கை கழுவிட

வஞ்சகர் (அநியாயமாய் குற்றம் சாட்டினோர்) குதுகலித்திட

பார்போரும் (சிலுவை அண்டை நின்றோர் ) பரிகசித்திட

சிலுவை மொழியோ “பிதாவே இவர்களுக்கு மன்னியும்” என்பதே, ஆமென்.

பரிசுத்தம்

பரிசுத்தம் என்னும் இத்தியானம் ஒரு தேவ பிள்ளை எவ்வாறு தன்னை பரிசுத்தமாய் காத்துக்கொள்ள வேண்டும் என்று வேதம் கற்று தரும் சத்தியங்களை விளக்குகிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க http://www.flipsnack.com/9696A7BA9F7/fdh9qjch (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்: