போதுமான தேவன் (you tube – Audio)

போதுமான தேவன் என்னும் இத்தியானம் தேவன் போதுமானவர் என்னும் சத்தியத்தை லூக்கா 12:15-34 என்ற வேத பகுதி மூலமாக  ஓலி வடிவில் (Audio – you tube) விளக்குகிறது.  தேவ செய்தியை கேட்க பின்வரும் லிங்கை கிளிக் செய்யவும்.

Direct link:   http://youtu.be/CHJNlBk3S2w

போதுமான தேவன் (mp3 on sound cloud)

போதுமான தேவன் என்னும் இத்தியானம் தேவன் போதுமானவர் என்னும் சத்தியத்தை லூக்கா 12:15-34 என்ற வேத பகுதி மூலமாக ஓலி வடிவில் (Audio – sound cloud) விளக்குகிறது.  தேவ செய்தியை கேட்க பின்வரும் லிங்கை கிளிக் செய்யவும்.

Direct link:   https://soundcloud.com/jesussoldierindia/pothumana-dhevan

உன்னதப்பாட்டின் உன்னதங்கள்

உன்னதப்பாட்டின் உன்னதங்கள் என்னும் இந்த தியானம், இந்த புத்தகத்தில் உள்ள வசனங்களுடைய இணை வசனங்கள் மூலம் உன்னதப்பாட்டின் உன்னதங்களை விளக்குகிறது.

(1) என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள். அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார் (உன் 2:16)

நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன். (யோ 17:21)

நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். (யோ 17:23)

நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம். இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள். இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன். (எபே 5:30-32)

(2) என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடிவருவோம். (உன் 1:4)

இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும். (யோ 10:16)

அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: எங்கே, ஆண்டவரே, என்றார்கள். அதற்கு அவர்: பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார். (லூக் 17:37)

நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார். (யோ 12:32)

(3) நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன். (உன் 2:1)

கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.  இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம். (II கொ 2:14,15)

(4) நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது. (உன் 8:6)

நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன். (யோ 10:15)

(5) நான் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன். (உன் 5:2)

இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். (வெளி 3:20)

குறிப்பு: மேற்க்கண்ட தியானத்தை pdf வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

வாழ்க்கை படகு

கடல் என்னும் இவ்வுலகில், வாழ்க்கை என்னும் என் படகில் அநேகரோடு பயணித்து கொண்டிருந்தேன். திடீரென்று பலத்த புயல் விசீயது, இருள் சூழ்ந்தது, எந்த திசையிலும் எந்த கரையும் தென்படவில்லை. ஐயோ! ஆண்டவரே புயல் விசூகிறதே (நாச மோசங்கள்) என்றேன், ஆண்டவர் அமைதியாய் இருந்தார். எல்லாம் இருளாய் (பயங்கரங்கள்) இருக்கிறதே என்றேன், ஆண்டவர் அமைதியாய் இருந்தார். எந்த கரையும் (வழியும்) தென்படவில்லையே என்றேன், ஆண்டவர் அமைதியாய் இருந்தார். எனக்கு அருமையானவர்களை காப்பாற்றும் என்றேன், ஆண்டவர் அமைதியாய் இருந்தார். மற்ற மனிதர்கள் கடலில் (உலகத்தில்) குதித்து ஓடிவிட்டனரே என்றேன், ஆண்டவர் அமைதியாய் அது அவர்கள் வழி என்றார்.

என்னை வேறு படகில் மாற்றுமே என்றேன், ஆண்டவர் அமைதியாய் இதுதான் உன் படகு (வாழ்க்கை) என்றார். என் படகு (வாழ்க்கை) மூழ்கபோகிறது, நான் மடிய போகிறேன் என்றேன். ஆண்டவர், நானும் உன்னோடு உன் படகில் இருப்பதை ஏன் மறந்தாய் என்றார். நானோ என்னால் இதை எதிர்கொள்ள (தாங்க) முடியவில்லை என்றேன். ஆண்டவர், நான் தான் படகை ஓட்டுகிறேன், பயப்படாதே என்றார். எனக்கு அருமையானவர்கள் படும் வேதனைகளை கண்டேன். அவர்களை அணைத்து கொண்டு, ஆண்டவரண்டையில் (அவர் பாதத்தில்) உட்கார்ந்தேன். சிறிது நேரத்தில் ஒளி வந்தது, இருள் மறைந்தது, தென்றல் விசீயது, புயல் அடங்கினது. ஆண்டவர் என் படகை நித்திய ஜீவ கரையில் சேர்த்தார்.

எனக்கு அருமையானவர்களை முதலாவது கரையில் இறக்கினேன். மிகவும் சோர்ந்து போனேன். ஆண்டவர் தம் கரத்தை நீட்டினார். அவர் கரத்தை பற்றி கொண்டு கரையில் இறங்கினேன். தூரத்தில் கடலில் குதித்தவர்கள் மாண்டு போயிருப்பதை கண்டேன். ஆண்டவரே ஏன் இதெல்லாம் நடந்தது என்றேன், ஆண்டவர் அமைதியாய் என்னை பின்பற்றி வா என்றார். இந்த போராட்டத்தில் (வாழ்க்கை படகில்) இருந்து என்னை காப்பாற்ற ஆண்டவர் பட்ட காயங்களை அப்பொழுதுதான் கண்டேன். கண்ணீரோடு அவர் பின் எனக்கு அருமையானவர்களோடு சென்றேன். பரலோக தேசத்தில் என் மோட்ச வீட்டை நோக்கி.

1. PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. ஆடியோ வடிவில்:

தழும்புகளால் குணமாகிறோம் (you tube – Audio)

தழும்புகளால் குணமாகிறோம் என்னும் இத்தியானம் ஆண்டவருடைய குணமாக்கும் வல்லமையை பற்றி வேதம் தரும் சத்தியங்களை ஓலி வடிவில் (Audio – you tube) கொண்டுள்ளது.  தேவ செய்தியை கேட்க பின்வரும் லிங்கை கிளிக் செய்யவும்.

Direct link:   http://youtu.be/E2K_UrX4FHU

தழும்புகளால் குணமாகிறோம் (mp3 on sound cloud)

தழும்புகளால் குணமாகிறோம் என்னும் இத்தியானம் ஆண்டவருடைய குணமாக்கும் வல்லமையை பற்றிய வேதம் தரும் சத்தியங்களை ஓலி வடிவில் (Audio – sound cloud) கொண்டுள்ளது.  தேவ செய்தியை கேட்க பின்வரும் லிங்கை கிளிக் செய்யவும்.

Direct link:   https://soundcloud.com/jesussoldierindia/thalumpugalal-kunamakirom